Loading...
ஜெம் வீரமணி வழக்கில் 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு; டிஜிபி உத்தரவு
ஜெம் வீரமணி வழக்கில் 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

ஜெம் வீரமணி வழக்கில் 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு; டிஜிபி உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2026
11:15 am

செய்தி முன்னோட்டம்

தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கினை தீவிரமாக விசாரிக்க, முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் 4 பெண் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இக்குழுவில் சென்னை கூடுதல் ஆணையர் ஐஜி தேன்மொழி தலைமையில் இணை ஆணையர் டிஐஜி திஷா மிட்டல் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏடிஜிபி அருண் மற்றும் ஐஜிபி கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மறுநாளே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது 

வீரமணியின் உதவியாளர் கைது மற்றும் கைப்பற்றப்பட்ட அதிர்ச்சி வீடியோ

இவ்வழக்கின் விசாரணையில், வீரமணியின் 23 ஆண்டு கால உதவியாளரான கணேசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கணேசனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில், வீரமணி மற்றும் சிறுமி தொடர்புடைய வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வீடியோ ஆதாரம் குறித்து காவல் துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்ததற்காகக் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வீடியோவை அனுப்பியது யார், அது வேறு யாருக்கெல்லாம் பகிரப்பட்டது என்பது குறித்துப் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டைரி

டைரியில் சிக்கிய 70 கோடி ரூபாய் லஞ்சப் புகாரும் சொத்து விற்பனையும்

போலீசார் நடத்திய சோதனையில் வீரமணியின் ரகசிய வரவு-செலவு டைரி சிக்கியது.

அதில், தன் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு சுமார் ரூ.70 கோடி வரை லஞ்சமாக கொடுத்ததாக பதிவுகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த லஞ்சப் பணத்தைக் கொடுப்பதற்காக சென்னை ஈசிஆர் மற்றும் ஊட்டியில் இருந்த ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்று பணம் திரட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அந்த ஆவணங்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

விசாரணை

விசாரணை வளையத்தில் மேலும் பலர் மற்றும் சம்மன் அனுப்பிய காவல் துறை

வீரமணியை சுற்றி இருந்த நபர்களிடம் விசாரணை விரிவடைந்து வரும் நிலையில், எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

டைரியில் இடம்பெற்றுள்ள பெயர்கள் உண்மையா மற்றும் அந்த 70 கோடி ரூபாய் பணம் யாருக்கெல்லாம் கைமாறியது என்பன போன்ற கேள்விகளுக்கு புதிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் விடை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT