கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், "இந்த வழக்குக்கு இந்திய அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது." என்று தெரிவித்துள்ளார். மேலும், "அந்த குடும்பங்களின் கவலைகள் மற்றும் வலிகளை முழுமையாகப் பகிர்ந்து கொண்டேன். அவர்களின் விடுதலையைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறேன்." என்று ட்விட்டரில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார். உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எட்டு இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு, கத்தார் நீதிமன்றம் சமீபத்தில் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய இந்திய அரசு, அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகக் கூறியிருந்தது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ட்விட்டர் பதிவு
பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டுகோள்
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கேப்டன்கள் நவ்தேஜ் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஷ்ட் மற்றும் கமாண்டர்கள் அமித் நாக்பால், பூர்ணேந்து திவாரி, சுகுணகர் பகாலா, சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இதற்கிடையில், இந்த விவாகரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு , அந்த 8 போரையும் மீட்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடுமபத்தினர் கோரியுள்ளனர். இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருக்கும் கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் சகோதரி பார்கவா(54), "எங்களிடம் அதிக நேரம் இல்லை. நமது எட்டு வீரர்களை மீண்டும் அழைத்து வருவதற்கு தனிப்பட்ட முறையில் தலையீட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.