ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023 ஆகியவை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. மசோதாவின் மேல் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "பிரதமர் நேரு செய்த இரண்டு தவறுகளால் ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டுள்ளது - முதலில், போர் நிறுத்தத்தை அறிவித்து," "பின்னர் காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது. ஜவஹர்லால் நேரு சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். இது ஒரு வரலாற்றுத் தவறு" என அமித்ஷா பேசினார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்த அமைச்சர் அமித்ஷா பேச்சை கண்டித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா 2023 எதை பரிந்துரைக்கிறது?
ஜம்மு மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) 2023, மசோதா, தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைகளில் இடஒதுக்கீடுகளை நிர்வாகிக்கும், காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம், 2004 சட்டத்தை மாற்றியமைக்கிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தால் அறிவிக்கப்பட்ட "பலவீனமான மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்" என்ற சொற்றொடரை "பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்று மாற்றுவது இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அடங்கும். இந்த மசோதா பலவீனமான மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் உண்மையான வரையறையை நீக்குகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023 மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் என்ன?
ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023 ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 சட்டத்தை திருத்துகிறது. இது ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக்கை யூனியன் பிரதேசங்களாக முந்தைய மாநிலத்தை மறுசீரமைக்க உதவியது. இந்த மசோதா, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 83-லிருந்து 90-ஆக அதிகரிக்க முன்மொழிகிறது. அதில் 7 இடங்கள் தாழ்த்தப்பட்ட சாதி உறுப்பினர்களுக்கும், 9 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்படும். மேலும், காஷ்மீர் புலம்பெயர்ந்த சமூகத்திலிருந்து இரண்டு உறுப்பினர்கள்(ஒரு பெண்) வரை சட்டமன்றத்திற்கு நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்குகிறது. கூடுதலாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த நபர்களை, பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினரும் பரிந்துரைக்கப்படலாம்.