கொல்கத்தா விமானநிலையத்தில் மோதிக்கொண்ட இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்
இன்று காலை கொல்கத்தா விமானநிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று ஆபத்தான முறையில் நெருங்கி வந்தது மோதிக்கொண்டது. அதிர்ஷ்டவசமாக, நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர். கொல்கத்தா விமான நிலையத்தில் தர்பங்கா நோக்கிச் செல்லும் இண்டிகோ விமானம் ஒன்று, ஓடுபாதையில் நுழைவதற்கு அனுமதிக்காகக் காத்திருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது மோதியது. தாக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி ஓடுபாதையில் விழுந்தது. அதேபோல இடித்ததில், இண்டிகோ விமானத்தின் இறக்கை பகுதியும் பாதிக்கப்பட்டது. இது குறித்து சிவில் ஏவியேஷன் இயக்குனரகம்(டிஜிசிஏ), இண்டிகோ ஏ320 விடி-ஐஎஸ்எஸ் விமானிகள் இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது என்று செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.