NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய ரயில்வே மின்மயமாக்கலின் நூற்றாண்டு கொண்டாட்டம்; முதல் மின்சார ரயில் எங்கே ஓடியது தெரியுமா?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய ரயில்வே மின்மயமாக்கலின் நூற்றாண்டு கொண்டாட்டம்; முதல் மின்சார ரயில் எங்கே ஓடியது தெரியுமா?
    ரயில்வே மின்மயமாக்கல் தொடங்கியதின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை மேற்கொள்ளும் இந்திய ரயில்வே

    இந்திய ரயில்வே மின்மயமாக்கலின் நூற்றாண்டு கொண்டாட்டம்; முதல் மின்சார ரயில் எங்கே ஓடியது தெரியுமா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 30, 2025
    08:53 am

    செய்தி முன்னோட்டம்

    பிப்ரவரி 3, 2025 அன்று இந்திய ரயில்வே மின்மயமாக்கல் பணியைத் தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்து ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்க உள்ளது.

    இந்த நிகழ்வு இந்தியாவின் முதல் மின்சார ரயில் தொடங்கப்பட்டதை நினைவுகூரும் மற்றும் நிலையான ரயில் நெட்வொர்க்கை நோக்கிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் என்று மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்புத் துறையின் அதிகாரி (CPRO) ஸ்வப்னில் நிலா தெரிவித்தார்.

    கூடுதல் விபரங்கள் இங்கே:

    மின்சார ரயில்

    நாட்டின் முதல் மின்சார ரயில்

    நாட்டின் முதல் மின்சார ரயில் பிப்ரவரி 3, 1925 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இது தற்போது சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் என அழைக்கப்படும் மும்பையில் உள்ள விக்டோரியா டெர்மினஸ் மற்றும் குர்லா ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட்டது.

    இது ரயில்வே நடவடிக்கைகளில் நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான ஆரம்ப படியாகும்.

    இந்த ரயில், எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (EMU), பசுமையான போக்குவரத்திற்கான குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

    தமிழகம்

    தமிழ்நாட்டின் முதல் மின்சார ரயில்

    தமிழ்நாட்டில் முதல் மின்சாரத்தில் இயக்கப்படும் ரயில் சென்னை புறநகர் ரயில் ஆகும். இது ஏப்ரல் 2, 1931 இல் சேவையைத் தொடங்கியது.

    இந்த ரயில் மெட்ராஸ் பீச் மற்றும் தாம்பரம் இடையே ஓடியது. இந்தியாவின் மின்மயமாக்கப்பட்ட முதல் மீட்டர் கேஜ் ரயில் பாதை என்ற சிறப்பை இது கொண்டுள்ளது.

    புறநகர்ப் பகுதிகளுக்கான சேவையை மேம்படுத்தவும், மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வேலைகளுக்கு இடையில் எளிமையாக செல்லவும் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை சென்ட்ரல் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே 1985 ஆம் ஆண்டு சென்னை புறநகர் ரயில்வேயின் இரண்டாவது பாதை திறக்கப்பட்டது மற்றும் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மூன்றாவது பாதை பின்னர் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மின்மயமாக்கல்

    100% மின்மயமாக்களை நிறைவு செய்த மத்திய ரயில்வே

    மின்மயமாக்கலின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு கூடுதலாக, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய ரயில்வே சமீபத்தில் அதன் நெட்வொர்க் முழுவதும் 100% மின்மயமாக்கலை அடைந்துள்ளது.

    இதற்கு முன்னர் கிழக்கு கடற்கரை, வட மத்திய, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு மத்திய ரயில்வே பிரிவுகள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளன.

    மின்மயமாக்கலின் நூற்றாண்டு நினைவை கொண்டாடும் வகையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் சிறப்பு ஓட்டம், தொழில்நுட்ப கருத்தரங்குகள் மற்றும் 3டி ப்ரொஜெக்ஷன் ஷோக்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    கொண்டாட்டங்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி ரயில்வே உள்கட்டமைப்பில் மின்மயமாக்கலின் தாக்கத்தை எடுத்துக்காட்டும் பல்வேறு நடவடிக்கைகளுடன் தொடரும்.

    கடந்த நூற்றாண்டில் இந்திய இரயில்வே மேற்கொண்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்வு இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ரயில்வே
    ரயில்கள்
    இந்தியா
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்திய ரயில்வே

    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? ரயில்கள்
    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! ரயில்கள்
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!  வந்தே பாரத்
    55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம்  இந்தியா

    ரயில்கள்

    மும்பையில் மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம் மும்பை
    வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி நடிகர் பார்த்திபன் புகார்; ரயில்வேயின் பதில் என்ன? வந்தே பாரத்
    ரயில் பயணிகள் கவனத்திற்கு! டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கால அவகாசம் குறைப்பு பயணம்
    அசாமில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து அசாம்

    இந்தியா

    ஜியோகாயின் என்ற கிரிப்டோ கரன்சியை அறிமுகம் செய்தது ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஜியோ
    ஈபிஎஃப்ஓ பயனர்களுக்கு குட் நியூஸ்; இரண்டு புதிய ஆன்லைன் வசதிகள் அறிமுகம் வருங்கால வைப்பு நிதி
    சிறப்பு மன் கி பாத் எபிசோடில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ஷுன்யா பறக்கும் டாக்ஸி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் பெங்களூர்

    சென்னை

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம் ஆன்லைன் விளையாட்டு
    ஊழியர்களுக்கு டாடா கார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசாக வழங்கும் சென்னை நிறுவனம் ராயல் என்ஃபீல்டு
    சென்னை டு வெள்ளை மாளிகை; டொனால்ட் டிரம்பின் ஏஐ கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் டொனால்ட் டிரம்ப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025