NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கை படகுகளை கைப்பற்றியது இந்திய கடற்படை
    அடுத்த செய்திக் கட்டுரை
    போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கை படகுகளை கைப்பற்றியது இந்திய கடற்படை
    போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கை படகுகளை கைப்பற்றியது இந்திய கடற்படை

    போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கை படகுகளை கைப்பற்றியது இந்திய கடற்படை

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 29, 2024
    12:57 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரு குறிப்பிடத்தக்க போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில், இந்திய கடற்படையினர் அரபிக்கடலில் இலங்கைக் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பல்களை இடைமறித்து, தோராயமாக 500 கிலோ கிரிஸ்டல் மெத்தை கைப்பற்றினர்.

    நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையானது, பிராந்திய பாதுகாப்பு சவால்களைச் சமாளிப்பதில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கடல்சார் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது.

    முன்னதாக, இந்த போதைப்பொருள் கடத்தல் குறித்து இலங்கை கடற்படை வழங்கிய ரகசிய தகவல்களின் அடிப்படையில், இந்திய கடற்படை நீண்ட தூர கடல் ரோந்து விமானம் மற்றும் தொலைதூர விமானம் மூலம் வான்வழி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

    குருகிராமில் உள்ள தகவல் இணைவு மையத்தின் (இந்தியப் பெருங்கடல் பகுதி) தரவு இந்த நடவடிக்கைக்கு மேலும் உதவியது.

    போதைப்பொருள் கடத்தல்

    போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

    இந்திய கடற்படையின் ஒரு போர்க்கப்பல் தலைமையில் அரபிக்கடலில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடி படகுகள், 500 கிலோ போதைப்பொருள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், கப்பல்கள் மற்றும் கடத்தல்காரர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இரு நாடுகளின் நெருங்கிய உறவுகளையும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் இந்த நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    இதற்கிடையே, சமீபத்தில் அந்தமான் கடலில் 6,000 கிலோ மதிப்பிலான மெத்தபோட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மியான்மர் கொடியுடன் சென்ற படகை அந்தமான் காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்திய கடற்படை அறிக்கை

    Narcotics Seizure - Combined Operation b/n #IndianNavy & @srilanka_navy.

    Based on information received from #SrilankaNavy regarding probable narcotics smuggling by Sri Lankan flagged fishing vessels, the @indiannavy swiftly responded through a coordinated operation to localise &… pic.twitter.com/dkpzNQonTF

    — SpokespersonNavy (@indiannavy) November 29, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடற்படை
    இந்தியா
    போதைப்பொருள்
    இலங்கை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை

    இந்தியா

    விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வருவார் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது விளாடிமிர் புடின்
    இந்தியாவுக்கான பயணிகளுக்கான ஸ்கிரீனிங்கை கடுமையாக்க கனடா திட்டம் கனடா
    இந்தியாவில் ₹8.8 லட்சத்தில் அறிமுகமானது கவாஸாகி ZX-4R: அதன் அம்சங்கள் இதோ கவாஸாகி
    தனியார் ஓடிடி நிறுவனங்களுக்கு போட்டி; வேவ்ஸ் என்ற புதிய ஓடிடியை அறிமுகம் செய்தது  பிரசார் பாரதி ஓடிடி

    போதைப்பொருள்

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இந்தியா
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் காவல்துறை
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு  மணிப்பூர்

    இலங்கை

    ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் கைது  ராமேஸ்வரம்
    இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேலும் 10,000 வீடுகள் - அடிக்கல் நாட்டப்பட்டது  இந்தியா
    Breaking: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அதிரடியாக இடைநீக்கம் செய்த ஐசிசி  கிரிக்கெட்
    Sports Round Up: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025