Page Loader
கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அரபிக்கடலில் கண்காணிப்பை அதிகரித்தது இந்திய கடற்படை

கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அரபிக்கடலில் கண்காணிப்பை அதிகரித்தது இந்திய கடற்படை

எழுதியவர் Sindhuja SM
Dec 31, 2023
02:29 pm

செய்தி முன்னோட்டம்

அரபிக்கடல் பகுதியில் இயங்கும் வணிக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய கடற்படை மத்திய மற்றும் வட அரேபிய கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரேபிய கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில், ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரேபிய கடல் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர்.

ஜஃபிசினெவ்க்

இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் அதிகரிக்கும் தாக்குதல்கள் 

கடந்த வாரம், இந்தியக் கடற்கரையில் இருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் MV Ruen கப்பலில் நடந்த திருட்டு சம்பவமும், குஜராத்தின் போர்பந்தருக்கு தென்மேற்கே சுமார் 220 கடல் மைல் தொலைவில் MV Chem Pluto கப்பல் மீது நடந்த ட்ரோன் தாக்குதலும் இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு(EEZ) மிக அருகில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் ஆகும். இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு(EEZ) மிக அருகில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இந்திய கடற்படை மத்திய மற்றும் வட அரேபிய கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது. போர் விமானங்கள் மற்றும் போர் கப்பலைகளின் நடமாட்டதை இந்திய பெருங்கக்கடலில் அதிகரித்ததன் மூலம் இந்திய கடற்படை கண்காணிப்பை மேம்படுத்தியுள்ளது.