NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / Honey Trap-ல் சிக்கி ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    Honey Trap-ல் சிக்கி ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி
    கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சதேந்திர சிவால்

    Honey Trap-ல் சிக்கி ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 15, 2024
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்ததாக, மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் இந்திய அதிகாரி ஒருவர் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

    இந்த விவகாரத்தில், அவர் எப்படி இந்த சதி வலையில் சிக்கினார் என்பதற்கான தகவலை வெளியிட்டுள்ளது, பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) தெரிவித்திருக்கிறது.

    கைதுசெய்யப்பட்ட நபரின் பெயர் சதேந்திர சிவால்.

    ஏடிஎஸ் இன்ஸ்பெக்டர் கூற்றுப்படி, உத்திரபிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த சதேந்திர சிவால் என்ற ஊழியர், சமூக ஊடகங்களில் "பூஜா மெஹ்ரா" என்று பெயர்கொண்ட ஒரு பெண்ணால் சதி வலையில் சிக்கினார்.

    அதனைத்தொடர்ந்து அவர் ரகசிய இராணுவ ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ள தூண்டப்பட்டுள்ளார்

    இவர், 2021-ஆம் ஆண்டு முதல் மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

    ஹனி ட்ராப்

    பகிரப்பட்ட ராணுவ ரகசியங்கள் 

    "கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில், பூஜா மெஹ்ரா, சவாலை தொடர்பு கொண்டார். அந்தப் பெண், அவரை ஹனி-ட்ராப் செய்து, பணத்துக்காக நாட்டின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளும்படி கூறியிருக்கிறார்".

    "அப்போது, இந்திய விமானப்படை, இந்திய கடற்படையின் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட ஆயுத அமைப்புகள் தொடர்பான ரகசிய ஆவணங்களை அந்தப் பெண்ணுடன் சிவால் பகிர்ந்திருக்கிறார். பெண்ணின் சமூக வலைதளக் கணக்கு பாகிஸ்தான் உளவுத்துறையால் இயக்கப்பட்டு வந்திருக்கிறது".

    "அவரது தொலைபேசி மற்றும் அவர் பயன்படுத்திய பிற கருவிகளின் தடயவியல் பரிசோதனை செய்யப்படுகிறது" என்று ATS விசாரணை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

    இதனால் சிவால் மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 121A, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1923-ன் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    மாஸ்கோ
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    தருமபுரி அருகே சாலை விபத்தில் நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு;  நால்வர் படுகாயம்  மலையாள திரையுலகம்
    நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய (ஜூன் 6) தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பு; ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு ரிசர்வ் வங்கி
    மஸ்க்-டிரம்ப் மோதல், இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தை பாதிக்குமா? சுபன்ஷு சுக்லா

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் குண்டுவெடிப்பு
    ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்
    இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்த, 'வீரமான' பாகிஸ்தானிடம் உதவி கோரும் முக்கிய ஹமாஸ் தலைவர் ஹமாஸ்

    மாஸ்கோ

    வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல் ரஷ்யா
    ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா  அமெரிக்கா
    27 டன் நிவாரண பொருட்களை காஸாவிற்கு அனுப்பியது ரஷ்யா ரஷ்யா
    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    உத்தரப்பிரதேசம்

    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் ரயில் நிலையம்
    சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது? பீகார்
    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு  தொல்லியல் துறை
    உத்தரப் பிரதேசத்தில், நவம்பர் 25 'அசைவமில்லா நாள்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது; அதற்கான காரணம்? யோகி ஆதித்யநாத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025