உலகிலேயே வெப்பமான 100 நகரங்கள்: இந்தியாவில் மட்டும் 95!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் கோடைக்காலம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான வெப்ப அலையை (Heatwave) உருவாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24, 2026) நிலவரப்படி, உலகிலேயே வெப்பமான 100 நகரங்களில் 95 நகரங்கள் இந்தியாவில் மட்டுமே அமைந்துள்ளதாக AQI.in தளம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியம் இந்தியாவின் வெப்ப மையமாக மாறியுள்ளது. நேற்று, அகோலா நகரில் நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையாக 46.9°C பதிவாகியுள்ளது. மத்திய இந்தியா முதல் சிந்து-கங்கை சமவெளி வரை டஜன் கணக்கான நகரங்கள் 40°C-ஐத் தாண்டி, 45°C-ஐ நோக்கி நகர்ந்து வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Maximum Temperatures (as on 26-04-2026): Maximum temperatures are in the range of 40-46℃ over most parts of the country except western Himalayan region, northeast Bihar, northeast India, where they are below 36℃.
— India Meteorological Department (@Indiametdept) April 26, 2026
The highest maximum temperature of 46.9°C was reported at… pic.twitter.com/1dsWtbUjyx
வெப்ப நிலவரம்
மாநில வாரியான வெப்ப நிலவரம்
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெப்பநிலையின் உயர்வை நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளது: மிகத் தீவிரம் (5.1°C-க்கு மேல்): இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சௌராஷ்டிரா. கணிசமான உயர்வு (3.1°C - 5°C): ஜார்கண்ட், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, குஜராத், பீகார், ஒடிசா, தமிழ்நாடு. சாதாரண உயர்வு (1.6°C - 3°C): கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம். இயல்பு நிலை: நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அசாம்.
தமிழ்நாடு
தமிழகத்தின் நிலைப்பாடு
தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 25) பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட 3°C முதல் 5°C வரை வெப்பநிலை அதிகமாகக் காணப்பட்டது. குறிப்பாக வேலூர், கரூர், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உணரப்படுகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடுமையான வெப்ப அலை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.