மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் டெல்டா பகுதிகள் மற்றும் தென்மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், குமரிக்கடல் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.