தமிழகம், புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு
இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகரித்தே காணப்படுகிறது. இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்னதாகவே தொடங்கி விட்டது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும், அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த இரு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39° - 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37° - 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° - 37° செல்சியஸ் இருக்கக்கூடும் எனத்தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்
#BREAKING || "தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்" தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்#BreakingNews #Chennai #TamilNadu #MET #Summer... pic.twitter.com/BwcC2BJiYH— Thanthi TV (@ThanthiTV) April 6, 2024