Page Loader
தமிழகத்தில் சதமடித்த வெயில்; அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
வெயிலின் உக்கிரம், நேற்று உச்சத்தை அடைந்தது

தமிழகத்தில் சதமடித்த வெயில்; அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

எழுதியவர் Venkatalakshmi V
May 01, 2024
02:43 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தி்ல் கடந்த இரண்டு மாதங்களாக கொளுத்தி வரும் வெயிலின் உக்கிரம், நேற்று உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று பதிவான வெப்பநிலை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 42.5 டிகிரி செல்ஷியஸ் வெயிலும், ஈரோட்டில் 42.2 டிகிரி செல்ஷியஸ் வெயிலும் பதிவாகி இருந்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 39.4 டிகிரி செல்ஷியஸ் வெயிலும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனினும், அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

embed

அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

#BREAKING | தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!#SunNews | #HeatWave | #TamilNadu pic.twitter.com/yweophKOqf— Sun News (@sunnewstamil) May 1, 2024