
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் சென்னை, கன்னியாகுமரி உட்பட 19 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
IMD அறிவிப்பின் படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கடந்த இரண்டு தினங்களாக ஊட்டி, அவலாஞ்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது, மழைநீர் வெள்ளமாக ஓடுவதால் அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்
#BREAKING | தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு #RainUpdate | #WeatherUpdate | #Rain pic.twitter.com/3gta3cQfnr
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 18, 2024