
அடுத்த சில மணி நேரத்தில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், நேற்றும்(ஏப்ரல் 24), அதற்கு முன்தினமும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தநிலையில், இன்று, ஏப்ரல் 25 தமிழகத்தில், கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இன்னும் சில மணி நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், IMD அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தமிழகத்தின் தெற்கு மற்றும் உட்பகுதியில் உள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், ஆகிய 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இன்றைய வானிலை அறிக்கை
#JUSTIN || சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், நாகையில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு… pic.twitter.com/cIl2KpmdxT
— Thanthi TV (@ThanthiTV) April 25, 2023