
மியான்மர் நிலநடுக்க நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் நிவாரண பணிகளான ஆபரேஷன் பிரம்மாவை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படையின் C-130J விமானம் ஜிபிஎஸ்-ஸ்பூஃபிங் (GPS spoofing) தாக்குதலை எதிர்கொண்டதாக செய்திகள் தெரிவித்தன.
இந்த தாக்குதல் நிகழ்நேர ஆயத்தொலைவுகளை மாற்றி, விமானத்தின் வழிசெலுத்தல் அமைப்பை நடுவில் தவறாக வழிநடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பான வழிசெலுத்தலை உறுதி செய்வதற்காக விமானப்படை விமானிகள் உடனடியாக உள் வழிசெலுத்தல் அமைப்புக்கு (INS) மாறினர் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஜிபிஎஸ் ஸ்பூஃபிங்
ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் என்றால் என்ன?
ஜிபிஎஸ் ஸ்பூஃபிங்(GPS spoofing) என்பது ஒரு வகையான சைபர் தாக்குதலாகும்.
இதில் போலி சிக்னல்கள் அனுப்பப்பட்டு, உண்மையான செயற்கைக்கோள் தரவை மீறி அமைப்புகளை குழப்புகின்றன.
முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இதேபோன்ற ஸ்பூஃபிங் சம்பவங்கள் நடந்துள்ளன.
நவம்பர் 2023 முதல் அமிர்தசரஸ் மற்றும் ஜம்மு அருகே இதுவரை 465 வழக்குகள் பதிவாகியுள்ளன.
நிலநடுக்கம்
3000க்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட மியான்மர் நிலநடுக்கம்
மார்ச் 28 அன்று, மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, 3,649 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 5,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் ஏற்பட்டன.
அண்டை நாடான தாய்லாந்து மற்றும் வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் தேடல் மற்றும் மீட்பு (SAR), மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம் மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ட தேவையான ஆதரவை வழங்க இந்தியா ஆபரேஷன் பிரம்மாவைத் தொடங்கியது.
மார்ச் 29 அன்று, C-130J விமானத்தைப் பயன்படுத்தி தொடங்கப்பட்ட இந்த நிவாரண உதவியில் இதுவரை, ஆறு விமானங்களும் ஐந்து இந்திய கடற்படைக் கப்பல்களும் 625 மெட்ரிக் டன் HADR பொருட்களை வழங்கியுள்ளன.