Page Loader
திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; நெரிசல் ஏற்பட்டது எப்படி?
நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; நெரிசல் ஏற்பட்டது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2025
09:43 am

செய்தி முன்னோட்டம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்காக டோக்கன் பெறுவதற்காக 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்டமாக கூடியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் மற்றும் "நிர்வாகத்தின் குறைபாடு" காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். நேற்று, புதன்கிழமை இரவு, வெள்ளிக்கிழமை தொடங்கும் 10 நாள் சிறப்பு வைகுண்ட துவார தரிசனத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பல பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் எப்படி நடந்தது என நேரில் பார்த்தவர்களும், விசாரணை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

விவரம்

உடல்நலம் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திறக்கப்பட்ட கதவு

தகவலின்படி, இறந்தவர்களில் மல்லிகா என அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் பக்தர், பைராகி பட்டிடா பூங்காவில் உள்ள டோக்கன் கவுன்டர் ஒன்றில் வரிசையில் காத்திருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கதவுகள் திறக்கப்பட்டன. இருப்பினும், இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மக்கள், கதவுகள் வழியே முன்னேறி செல்ல எத்தனிக்கையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களில் உயிரிழப்பும், உடல்நல பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில் சலசலப்பின் போது மக்கள் ஒருவரையொருவர் தள்ளிவிடுவதையும், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நிர்வகிப்பதைக் காட்டுகிறது. நெரிசல் ஏற்பட்ட பிறகு காயமடைந்த பக்தர்களுக்கு போலீசார் CPR செய்வதையும் மற்ற வீடியோக்கள் காட்டுகின்றன.

பதில் 

சம்பவம் குறித்து TTD கூறிய விளக்கம்

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, டோக்கன் வினியோகத்திற்காக 91 கவுன்டர்கள் வியாழக்கிழமை காலை தொடங்குவதாகத் தெரிவித்தார். "கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர், 40 பேர் காயம் அடைந்துள்ளனர், சிறந்த மருத்துவ வசதிகளை செய்து தருகிறோம். டிடிடியின் வரலாற்றில் இதுபோல் நடந்ததில்லை. பக்தர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். விசாரணை நடத்தி தீவிர நடவடிக்கை எடுப்போம். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் இன்று திருப்பதிக்கு வருகை தர உள்ளனர்" என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்திற்கு தவறான நிர்வாகமே காரணம் என்று டிடிடி தலைவர் பிஆர் நாயுடு குற்றம் சாட்டினார்.