TVK தலைவர் விஜய்யின் அரசியல் கன்னி பேச்சு: மற்ற அரசியல் காட்சிகள் தந்த ரியாக்ஷன் என்ன?
தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொள்கைகளை காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில் திமுக மற்றும் பாஜக, போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில், விக்கிரவாண்டியில் நேற்று (அக்டோபர் 27) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய விஜய், "நாங்கள் நம்பிக்கையுடன் வருபவர்களை எப்போதும் ஆதரிக்கிறோம். 2026 சட்டசபை தேர்தலில் எங்கள் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் எண்ணத்துடன் எங்களுடன் இணையும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்குவோம்" எனக் கூறினார்.
விஜய்யின் 'political bomb'க்கு மற்ற கட்சியினர் கூறியது என்ன?
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர்,"ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் கூட்டணி ஆட்சி எனக்குப் பிடித்தவை" என தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீமான், தவெக கட்சியின் கோட்பாடுகள் உடன் தங்களுக்கு உடன்பாடில்லை என்றார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,"விஜயின் மாநாட்டால் அ.தி.மு.க.,க்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார். சபாநாயகர் அப்பாவு,"ரஜினி அரசியலுக்கு வராததால் பா.ஜ.க, விஜய்க்கு ஆதரவாக இருக்கிறதா என சந்தேகம் உள்ளது. வருமான வரி சோதனையின் போது, தி.மு.க.தான் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது" எனத்தெரிவித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: "விஜய் A டீம் அல்லது B டீம் இல்லாமல், பா.ஜ.,வின் C டீம் ஆக இருக்கிறார். அதிமுக குறித்து அதிகம் பேசாமல், அக்கட்சி தொண்டர்களை ஈர்க்கவே அவர் அவ்வாறு பேசியுள்ளார்" என்றார்.