
தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(டிச.,14) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் நாளையும்(டிச.,15) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, வரும் 16ம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும்,
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
மேலும் வரும் 17ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்காலின் ஒருசில பகுதியிலும் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே தினம் வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட சில இடங்களிலும் லேசான மழை இருக்கும் என்று தெரிகிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக வரும் டிச.18ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பரவலாக பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வானிலை அறிக்கை
“16 - 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு“
— Thanthi TV (@ThanthiTV) December 14, 2023
தமிழகத்தில் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை
சென்னை வானிலை ஆய்வு… pic.twitter.com/vvXidODtLZ