தஞ்சாவூரில் தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை உண்டு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு விடாது மழை பெய்துள்ளது.
குறிப்பாக தஞ்சாவூரில் விடிவிடிய பெய்த மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் பெய்த கனமழை காரணமாக பட்டுக்கோட்டை, மணிகூண்டு, தலைமை தபால் நிலையம் மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில் 17.5 செ.மீட்டர் மழையும், கோடியக்கரையில் 13.4 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு#SunNews | #Thanjavur
— Sun News (@sunnewstamil) November 18, 2024