
மிக்ஜாம் புயல்: அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
புயல் நிலவரம்: சென்னைக்கு வட கிழக்கே சுமார் 100 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள மிஜாம் புயல், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து, நாளை முற்பகல் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு சில தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 4
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்-- திருவள்ளூர்
அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம்
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- வேலூர், திருவண்ணமலை, விழுப்புரம்
டக்வ்ஹ்ட்ஜ்
டிசம்பர் 5
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- திருவள்ளூர், இராணிப்பேட்டை
டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 7
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.