ஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: 45 °Cஐ நெருங்குகிறது வெப்பநிலை
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த மாநிலங்கள் மிக அதிக வெப்பநிலையை பதிவு செய்ய வாய்ப்பிருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிக்கிம், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப அலைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அதனால், இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை கொஞ்சம் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதன் முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
DETAILS
வெப்ப அலையால் மகாராஷ்டிராவில் 13 பேர் உயிரிழப்பு
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நேற்று வெப்ப அலைகளை ஒத்த வெப்பநிலை இருந்தது. இன்றும் அதே போன்ற வெப்பநிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்ப அலைகளுக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என்பது அதிக வெப்பநிலையைக் குறிக்கிறது. நீண்ட நேரம் வெயிலில் அதிக வேலை செய்யும் நபர்களுக்கு வெப்ப நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை இந்த எச்சரிக்கை கூறுகிறது.
ஒரு நாளுக்கு முன், மகாராஷ்டிரா அரசாங்க நிகழ்வில் பல மணிநேரம் திறந்த வெளியில் அமர்ந்திருந்த 13 பேர் உயிரிழந்தனர். இவர்கள் வெப்ப நோய்களால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.