தமிழகம் முழுவதும் இன்று டாக்டர்கள் வேலை நிறுத்தம்; OP இல்லை, அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்படும்!
செய்தி முன்னோட்டம்
சென்னையில், நேற்று டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்று, நவம்பர் 14 தமிழகத்தில் உள்ள 45,000 டாக்டர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
நேற்று கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவர் டாக்டர் பாலாஜி மீது ஒரு நோயாளியின் மகன் மேற்கொண்ட கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதற்கு நேற்றே மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கினர்.
எனினும் தமிழக அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதை அடுத்து இன்று ஒருநாள் மட்டும் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட மருத்துவர்கள் தீர்மானித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN | சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
— Sun News (@sunnewstamil) November 14, 2024
மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த…
போராட்டம்
கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம்
இந்த சம்பவத்துக்கு எதிராக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைத் துறைகள் மற்றும் டாக்டர் சங்கங்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
தமிழ்நாட்டில் 7900 மருத்துவமனைகள், 45,000 டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இதனால், புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு (OP) இன்று செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவுகள் (Emergency) வழக்கபோல் செயல்படும். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட காயமடைந்த டாக்டர் பாலாஜி கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷ் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.