Page Loader
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: கிண்டி மருத்துவமனை வளாகத்தில் இருந்த அரசு மருத்துவருக்கு 7 இடங்களில் கத்திக்குத்து
கிண்டி மருத்துவமனை வளாகத்தில் இருந்த அரசு மருத்துவருக்கு கத்திகுத்து

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: கிண்டி மருத்துவமனை வளாகத்தில் இருந்த அரசு மருத்துவருக்கு 7 இடங்களில் கத்திக்குத்து

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2024
01:31 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு அரசு மருத்துவரை, மருத்துவமனை வளாகத்திலேயே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் பாலாஜியை கழுத்து, முதுகு, தலை உட்பட 7 இடங்களில் கத்திக்குத்து நடந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. தாய்க்கு சரியான சிகிச்சை வழங்கப்படவில்லை என கூறி, விக்னேஷ் என்ற நபர் டாக்டரை தாக்கியதாக போலீசாரால் கண்டறியப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அறிக்கை

சுகாதாரத்துறை அமைச்சர் கூறியது என்ன?

இது குறித்து நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், மா.சுப்பிரமணியன்,"கிண்டி அரசு மருத்துவமனையில் நடந்த இந்த கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மற்ற நபர்களும் கைது செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். மேலும், விக்னேஷ் தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று தவறாகப்புரிந்து கொண்டு டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியதாகத் தெரியவந்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே தீவிர சிகிச்சை பிரிவு இருப்பதால், தாக்குதலுக்கு ஆளான டாக்டர் பாலாஜி உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த தாக்குதலை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம், காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post