NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?
    நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க ஆளும் கட்சி மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2023
    03:06 pm

    செய்தி முன்னோட்டம்

    INDIA கூட்டணி(காங்கிரஸ், திமுக உட்பட) கட்சிகளும், தெலுங்கானாவின் BRS கட்சியும், மக்களவையில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக இரண்டு தனித்தனி நம்பிக்கையில்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளன.

    அரசாங்கத்திற்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இதற்கான விவாத தேதியை சபாநாயகர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மணிப்பூரில் 2 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை கலவரங்களால் இதுவரை குறைந்தது 160-பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஆனால், அங்கு நடந்துவரும் கலவரங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதற்கிடையில், மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை-19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பிஜில் 

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கவிழ்க்கப்படுமா?

    இதனை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளன.

    இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பதவி விலக வேண்டி இருக்கும்.

    நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க ஆளும் கட்சி மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    ஆனால், ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்தால் உடனடியாக ஆட்சி கவிழும்.

    பாஜக அரசு மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 272 எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    தற்போது, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி(NDA) கட்சிகளை சேர்ந்த 331 உறுப்பினர்கள் மக்களவையில் உள்ளனர். இதில் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் 303 பேர் ஆவர். அதனால், பாஜக ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    பாஜக
    நாடாளுமன்றம்
    எதிர்க்கட்சிகள்

    சமீபத்திய

    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    பாஜக

    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  ராஜ்நாத் சிங்
    திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    டெல்லியில் தரையிறங்கினார் பிரதமர் மோடி: பாஜக தலைவர்கள் வரவேற்பு  டெல்லி

    நாடாளுமன்றம்

    அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை இந்தியா
    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் உச்ச நீதிமன்றம்

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பாஜக
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  பாஜக
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025