NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜி20 உச்சி மாநாடு: எந்தெந்த உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்கள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜி20 உச்சி மாநாடு: எந்தெந்த உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்கள்?
    உலகின் 20 முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    ஜி20 உச்சி மாநாடு: எந்தெந்த உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்கள்?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 05, 2023
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜி20 உச்சி மாநாடு புது டெல்லியில் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்குகிறது.

    உலகின் 20 முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா,சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா,மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா,துருக்கி, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகள் சேர்ந்த குழு தான் ஜி20 என்று அழைக்கப்படுகிறது.

    புது டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் மேற்குறிப்பிட்ட 20 நாடுகளின் பிரதிநிதிகளை தவிர, மேலும் 9 நாட்டை சேர்ந்த சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொள்ள இருக்கிறாரார்கள்.

    இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் உலக தலைவர்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

    ஹஜ்வ்ப்ஜ்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வருகிறார். உச்சி மாநாட்டிற்கு முன்னதாக அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அதிபர் பைடன் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்பார். அங்கு அவரும் மற்ற ஜி20 தலைவர்களும் உலக பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள்.

    சீன பிரீமியர் லீ கியாங்

    ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கு பதிலாக சீனாவின் பிரீமியர் லீ கியாங் கலந்து கொள்வார் என்று சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜி20 மாநாட்டை ஜி ஜின்பிங் தவிர்ப்பது இதுவே முதல் முறையாகும்.

    டாக்ஸா

    பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

    பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார். பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பிறகு, அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

    ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்

    செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் தான் கலந்து கொள்ள இருப்பதை ஏற்கனவே ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதி செய்துவிட்டார். ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய பயணம் மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இந்தியாவை தவிர, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் அவர் அடுத்தடுத்த பயணிக்க இருக்கிறார்.

    டிஜி

    கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

    கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜி 20 உச்சி மாநாட்டிற்காக புது டெல்லிக்கு வருவதற்கு முன்பு ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவுக்குச் செல்ல இருக்கிறார்.

    ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்

    ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதை ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸும் உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் சீனாவின் அதிபர்கள் இல்லாத போதிலும் ஜி 20 உச்சிமாநாடு முக்கியமானது என்று ஆவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

    ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா

    புது டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த மாநாட்டின் போது, உக்ரைன் போர் தொடர்பாக அவர் ரஷ்யாவை விமர்சிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

    தனிவ்க்க்

    தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல்

    தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோலும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வர இருக்கிறார். வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் குறித்து உலக தலைவர்கள் முன்னிலையில் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

    இம்மானுவேல் மேக்ரானும் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். மேலும், அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

    முகமது பின் சல்மான் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    டக்ஞ்சைக்

    தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா

    இந்த முறை ஜி20க்கு தலைமை தாங்கும் இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

    வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா

    ஜி20 மாநாட்டில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையாளராக பங்கேற்க இந்தியாவால் அழைக்கப்பட்ட நாடுகளில் பங்களாதேஷும் ஒன்றாகும்.

    துருக்கிய அதிபர் தயிப் எர்டோகன்

    தையிப் எர்டோகன், ஜி20 மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவர் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ்

    ஜி20 மாநாட்டில் தான் கலந்து கொள்வதை ஆல்பர்டோ பெர்னாண்டஸும் உறுதி செய்துள்ளார்.

    திஜுகேள்

    நைஜீரியாவின் அதிபர் போலா டினுபு

    நைஜீரியாவின் அதிபர் போலா டினுபு ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். நைஜீரியாவில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக உலகளாவிய மூலதனத்தை திரட்டவும் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

    செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய அதிபருக்கு பதிலாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தன்னால் உச்சிமாநாட்டில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

    இவர்களை தவிர, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோரும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜி20 மாநாடு
    புது டெல்லி
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஜி20 மாநாடு

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  தமிழ்நாடு
    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு மு.க ஸ்டாலின்
    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு  டெல்லி
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி

    புது டெல்லி

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்விக்கி, சோமாட்டோ, அமேசான் டெலிவரிகளுக்கு தடை  ஜி20 மாநாடு

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 31 தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள் வணிகம்
    உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் உலகம்
    100 கிராம் பம்ப்கின் விதைகள் - மறைந்திருக்கும் நன்மைகள்  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025