
41 ஆண்டுகளுக்கு முன்: ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார்.
இந்த நிலையில், 41 வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரியாவிற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்ற போது என்ன நடந்தது என ஒரு ரிவைண்ட் பார்வை.
அவரின் விஜயத்தின் போது, ராணுவ தளவாடங்களுக்கான ஒப்பந்தங்களை இட்டார் என செய்திகள் கூறுகிறது.
குதிரை இறக்குமதியிலிருந்து தற்போது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் புதுமைகளை அதிகரிக்க ஒரு கூட்டு ஹேக்கத்தான் வரை, ஆஸ்திரியாவுடன் இந்தியாவின் நட்புறவு எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஒப்பந்தங்கள்
எஃகு ஆலை, குதிரைகள் இறக்குமதி போன்ற பல ஒப்பந்தங்கள்
இந்திரா காந்தி, ஜூன் 19, 1983 அன்று அவர் வியன்னாவுக்கு சென்றார்.
அவரை அப்போதைய ஆஸ்திரியா அதிபர் பிரெட் சினோவாட்ஸ் வரவேற்றார். பிரதமர் இந்திரா காந்தி மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, இரு நாட்டு தலைவர்களும் உலகளாவிய பொருளாதாரம், ஆப்கானிஸ்தான் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து கணிசமான விவாதங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் ஒரு பெரிய ஆஸ்திரிய எஃகுத் ஆலை மற்றும் மூன்றாம் நாடுகளில் கூட்டு முயற்சிகள், இந்திய மலைப் படைகளுக்கு 1,500 குதிரைகள் வழங்குவது ஆகியவையும் ஒப்பந்தமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
விமர்சனங்கள் இருந்தபோதிலும், இந்த சுற்றுப்பயணம் வெற்றிகரமாக ஐரோப்பிய நாடுகளிடையே இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வத்தை அதிகரித்தது.
மோடி பயணம்
மோடியின் தற்போதைய பயணித்தால் போடப்பட்ட ஒப்பந்தங்கள்
பிரதமர் மோடியின் தற்போதைய ஆஸ்திரியா பயணத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதித்த இரு தலைவர்களும் பெடரல் சான்சலரியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை ஊக்குவித்து, இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரிய நிறுவனங்களை அழைத்துள்ளார் பிரதமர் மோடி.
மருந்து மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய மற்றும் ஆஸ்திரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு இடையே சாத்தியமான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் மோடி மற்றும் நெஹாம்மர் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.