நடுங்கும் குளிர்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க மீட்பு பணியாளர்கள் அயராது உழைத்து வரும் நிலையில், அப்பகுதியின் வானிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.
தற்போது, உத்தரகாண்டின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதால், மீட்பு பணிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 4,000 மீட்டர் உயரம் உள்ள உத்தரகாண்ட் பகுதிகளில் பனி பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது மேலும் பீதியை கிளப்பியுள்ளது.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி சில்க்யாரா சுரங்கப்பாதை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
அப்போதிலிருந்து 16 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், அந்த சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
டவ்ஜ்க
மீட்பு பணிகளில் ஏற்படும் தொடர் சவால்கள்
சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஒரு குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை ஏற்பட வாய்ப்பிருப்பதால், மீட்பு பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.
எனினும், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக மீட்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே, மீட்பு பணிகளின் போது தோண்டப்பட்ட துளைகள் பல முறை சரிந்து விழுந்ததால் தொழிலாளர்களை மீட்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிநவீன டிரில்லிங் இயந்திரம் உட்பட இரண்டுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் சேதமடைந்ததாலும் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.