பிரமாண்டமாக நிறைவடைந்த சென்னை Formula 4 கார் பந்தயம்: வெற்றியாளர்கள் விவரம்
நேற்று, சென்னை தீவுத்திடலில் இரவு நேர பார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களை தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுகள் வழங்கி கௌரவித்தார். ஃபார்முலா 4 இந்தியன் ரேஸ், இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஜேகே எஃப்எல் ஜிபி 4 என மூன்று வகை போட்டிகளில் பிரதான சுற்று போட்டி நேற்று மாலையில் தொடங்கியது. இந்த போட்டிகளை காண நாடு முழுவதிலுமிருந்து திரையுலகினர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர். நடிகர்கள் நாக சைதன்யா, அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரகாம், திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியும் வந்திருந்தார்.
ரேஸில் வெற்றி பெற்றவர்கள் விவரங்கள்
ஜேகே எஃப்எல் ஜிபி 4 பிரிவில் முதல் ரேஸில் டில்ஜித் என்ற டார்க் டான் அணியை சேர்ந்த வீரர் முதல் இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் முதல் ரேசில் ஹய்முன் முதலிடத்தை பிடித்தார். கோவா அணியை சேர்ந்த அவரும், அதே கோவா அணியை சேர்ந்த மற்றொரு வீராங்கனை கேப்ரியல் ஜெய்கோவாவும் இரண்டாவது இடத்தை பிடித்தனர். இந்தியன் ரேசிங் லீக் இரண்டாவது ரேஸில் போர்ச்சுகல் நாட்டை சார்ந்த டெல்லி அணி வீரர் ஆல்வெரோ முதலிடைத்தை பெற்றனர். இரண்டாவது இடத்தை கோவா அணியை சார்ந்த இந்திய வீர சுனில் ஷாவும், மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணியை சார்ந்த இந்திய வீரர் ரிஷான் ராஜுவும் பிடித்தனர்.