
தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் முன்னாள் கவர்னரும், உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையும் கொண்ட பாத்திமா பீவி, இன்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 96.
பாத்திமா பீவி, 1997 ஆண்டு முதல் 2001 வரை தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.
அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேரளாவின், பத்தனம்திட்டாவை பூர்விகமாக சேர்ந்த பாத்திமா பீவி, அறிவியலில் இளங்கலை பட்டம் முடித்த பின்னர், சட்டம் பயின்றார்.
திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரியில் படித்த பாத்திமா பீவி, அதன் பின்னர் கேரளா நீதிமன்றத்தில் தனது சட்ட பணியினை துவங்கினார்.
ட்விட்டர் அஞ்சல்
முன்னாள் ஆளுநர் காலமானார்
#BREAKING || தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) காலமானார்#FathimaBeevi #RIPFathimaBeevi pic.twitter.com/bjPeWFg5Qt
— Thanthi TV (@ThanthiTV) November 23, 2023
card 2
முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி
1989 இல் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக பணி ஓய்வு பெற்ற பாத்திமா பீவி, மீண்டும் அதே ஆண்டு, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
1992 வரை நீதிபதியாக பதவி வகித்த பாத்திமா பீவி, தன்னுடைய பதவி காலம் முடிந்த பிறகு, 1997-இல் ஆளுநராக நியமிக்கபட்டார்.
அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் வலியுறுத்தலின் பெயரிலேயே அவர் தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படி பல பெருமைகளை கொண்ட பாத்திமா பீவி, கடந்த சில நாட்களாக, வயது சார்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்டு, கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிகிச்சை பலனின்றி இன்று(நவ.,23) காலமானார்.