முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பிவி நரசிம்மராவ், விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் மற்றும் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் இந்தியாவின் 'பசுமைப் புரட்சி'க்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு, மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு. இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது. பி.வி.நரசிம்ம ராவின் பேரன் என்.வி.சுபாஷ் கூறியதாவது: "நரசிம்ம ராவ் ஜிக்கு பாரத ரத்னா கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடிக்கு நான் மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது" இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,"நரசிம்ம ராவின் "தொலைநோக்கு தலைமை" இந்தியாவை பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கும், நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதற்கும் கருவியாக இருந்தது" என்றார்.