Loading...
தனியார் பள்ளி அங்கீகார லஞ்ச வழக்கு: முன்ஜாமீன் தள்ளுபடியான சில மணி நேரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது
முன்ஜாமீன் தள்ளுபடியான சில மணி நேரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது

தனியார் பள்ளி அங்கீகார லஞ்ச வழக்கு: முன்ஜாமீன் தள்ளுபடியான சில மணி நேரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 26, 2026
04:36 pm

செய்தி முன்னோட்டம்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று மாலை கைது செய்தனர். கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி சான்றுகள் வழங்க லஞ்சம் கோரப்பட்டதாக எழுந்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் FIR பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதும் கைது

இவ்வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பக் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷை நேரில் சென்று கைது செய்தனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைந்த பிறகு, லஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் முதல் முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவார்.

இவ்வழக்கில் ஏற்கனவே தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் உதவியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT