
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி கார் விபத்தில் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக முக்கிய முன்னணி உறுப்பினரான திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யப்பிரியா, குன்னூர் மலைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோசமான கார் விபத்தில் உயிரிழந்தார்.
திவ்யப்பிரியா தனது கணவர் கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 20ஆம் தேதி நீலகிரிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தார்.
சுற்றுலா முடித்துவிட்டு மேட்டுப்பாளையம் திரும்பும் வழியில், குன்னூர் அருகே வண்டியின் பிரேக் இயங்காததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திவ்யப்பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காரில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
திருமணமாகி மூன்று மாதங்களேயான திவ்யப்பிரியாவின் மரணம், திண்டுக்கல் சீனிவாசனின் குடும்பத்தினரை பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி கார் விபத்தில் உயிரிழப்பு!#SunNews | #DindigulSrinivasan | #Accident pic.twitter.com/b92p8WRP4H
— Sun News (@sunnewstamil) May 23, 2025