வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்; உறுதிப்படுத்திய வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் அடுத்த 3 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாகும் என இன்று உறுதிபட அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுவதற்கான வலுவை இழந்த நிலையில் தற்போது, இது சென்னைக்கு தென் கிழக்கில் 470 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. முன்னதாக, வானிலை மையம், இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என்றும், நாளை மாலைக்குள் மேலும் வலுவிழக்கும் எனத்தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது, அது பெங்கல் புயலாக மாறுவதாக வானிலை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
Twitter Post
வானிலை மையத்தின் அறிவிப்பு
தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயலாக மாறி, அடுத்த 3 மணி நேரத்தில் பெங்கல் புயலாக உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. வடமேற்குதிசையில் நகர்ந்து, நாளை (நவ. 30) காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும் போதே, 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்ததன் படி, நாளை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளனர்.