
குரூப்-4 தேர்வு ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலகர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 போட்டித் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் இந்த தேர்வு, வரும் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பினை, தனது வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளது ஆணையம்.
அந்த அறிவிப்பின்படி, இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள், இன்று, ஜனவரி 30, 2024 தொடங்கி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்படும்.
பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்களில், மார்ச் 4 முதல் 6-ஆம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து குரூப்-4 தேர்வு, ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
குரூப்-4 தேர்வு
#NewsUpdate | விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மார்ச் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை 3 நாட்கள் அவகாசம் - TNPSC#SunNews | #TNPSC | #Group4 https://t.co/A1o9XWWhUZ
— Sun News (@sunnewstamil) January 30, 2024