Page Loader
கோவை மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜகவின் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்

கோவை மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜகவின் அண்ணாமலை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 04, 2024
02:06 pm

செய்தி முன்னோட்டம்

கோவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மதியம் 1:30மணி நிலவரப்படி, திமுகவின் கணபதி ராஜ்குமார் 1,27,784 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதே நேரத்தில், பாஜகவின் அண்ணாமலை 1,02,784வாக்குகள் பெற்றுள்ளார். மறுபுறம், அதிமுகவின் சிங்கை ராமசந்திரன், 53811 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு கணிப்புகளின்படி, தமிழக பாஜக தலைவரும், அக்கட்சியின் முன்னணி தலைவருமான கே.அண்ணாமலை லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் தோல்வியடைய வாய்ப்புள்ளது. இருப்பினும், அண்ணாமலை அதனை மறுத்து, ஜூன் 4 ஒரு ஆச்சரியம் நிகழும் என்றார். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ட்விட்டர் அஞ்சல்

தமிழகத்தில் பாஜகவின் நிலை

அண்ணாமலையின் அலை

அண்ணாமலையின் யாத்திரை பாஜகவிற்கு உதவியதா?

தமிழகத்தில் பல தொகுதிகளில் திமுகவிற்கு அடுத்த இடத்தில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது அண்ணாமலை செய்த களப்பணி காரணமாகவே என அக்கட்சியினர் தெரிவித்து உள்ளனர். கடந்த தேர்தலை விட, இந்த தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு 10 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி. எந்த பெரும்கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்ட அதிமுக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது சற்றே கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை சதவிகிதத்தின் படி, திமுக 25.09% மற்றும் காங்கிரஸ் 10.68 % ஓட்டுகள் பெற்றுள்ளது.