நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்
செய்தி முன்னோட்டம்
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக கரும்பு விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி டெல்லி உயர்நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
விசாரணையின் போது, நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், ஒரு சின்னத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேலும் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்திடம் காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால், அவர்கள் கேட்ட சின்னத்தை ஒதுக்க முடியவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதனையடுத்து புதிய சின்னத்திற்கு நாம் தமிழர் கட்சி விண்ணப்பித்ததிருந்ததை தொடர்ந்து, மைக் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
ட்விட்டர் அஞ்சல்
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்
நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது > https://t.co/s6n0mjaYNi #Election2024 | #LokSabhaElection2024 | #NaamTamilarKatchi | #NTK | #NTKSymbol | #Mic | #Seeman | #ElectionCommission pic.twitter.com/ux2rZbqHHq
— Tamil The Hindu (@TamilTheHindu) March 22, 2024