Page Loader
ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை
ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை

ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை

எழுதியவர் Nivetha P
Nov 27, 2023
02:01 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகா-தும்கூர் மாவட்டத்திலுள்ள சதாசிவ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கரீப் சாப்(36), இவரது மனைவி சுமையா(32). இவர்களுக்கு ஹஸீரா(14)என்ற மகளும், முகமது சுபன்(10),முகமது முனீர்(8)என்ற 2 மகன்களும் உள்ளனர். கரீப் சாப் அதேப்பகுதியில் உணவகம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார். அதில் போதிய வருமானம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் தெரிந்தவர்கள் சிலரிடம் மொத்தம் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அத்தொகையினை திருப்பித்தராததால் அனைவரும் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். குறிப்பாக தங்கள் கீழ்வீட்டில் இருப்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கிய நிலையில் அவர் கரீபின் மனைவி-பிள்ளைகளை மிகவும் அவதூறாக பேசியுள்ளார். இதனால் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளான அத்தம்பதி உணவில் விஷம் வைத்து தனது மூன்று பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

தற்கொலை 

வழக்குப்பதிவு செய்து விசாரணையினை துவங்கிய காவல்துறை 

தற்கொலை செய்து கொள்ளும் முன், மொபைல் போனில் வீடியோ மூலம் கரீப் தங்கள் மரணத்திற்கு காரணமான, தங்களிடம் பணம் கேட்டு மிகவும் கேவலமாக பேசிய தங்களது கீழ்வீட்டில் வசிக்கும் நபருக்கு கடமையான தண்டனை வழங்கவேண்டும் என்றும், 3 மாதமாக வீட்டிற்கு வாடகைக்கூட கொடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டிற்கான முன்பணத்தினை தனது பாட்டியிடம் கொடுத்து விடும்படி கேட்டுக்கொண்டுள்ள கரீப் சாப், இந்த வீடியோ பதிவினை தனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவலளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறை சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பார்த்தப்பொழுது 5 பேரும் பிணமாக கிடந்துள்ளனர். அவர்களது உடல்களை மீட்ட காவல்துறையினர் பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையினையும் துவங்கியுள்ளனர்.