Page Loader
பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது
தமிழக காவல்துறையினர், அவரை மங்களூரில் வைத்து கைது செய்துள்ளனர்

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2024
02:18 pm

செய்தி முன்னோட்டம்

காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்ததாக பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தன்னை காவல்துறையினர் தேடுவதை அறிந்த மகுடீஸ்வரன் தலைமறைவானார். இந்த நிலையில் அவர் மங்களூர் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் வரவே, அங்கே விரைந்த தமிழக காவல்துறையினர், அவரை மங்களூரில் வைத்து கைது செய்துள்ளனர்.

embed

திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது

#Update | காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைது https://t.co/y0sQo9gIOB— Sun News (@sunnewstamil) April 11, 2024