
மேடையிலேயே தமிழிசையை எச்சரித்தாரா அமித் ஷா? வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசைக்கும், தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமித்ஷா தமிழிசையை கண்டிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாதது, தமிழக பாஜக தொண்டர்களுக்கு மட்டுமின்றி, மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
25 தொகுதிகளை இலக்காக வைத்து போட்டியிட்ட பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
எனினும் வாக்கு விகிதம் குடியிருப்பதாக அண்ணாமலையின் விசுவாசிகள் தெரிவிக்கும் நிலையில், முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசைக்கும், தற்போதைய தலைவர் அண்ணாமலைக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாக பேச்சு எழுந்தது.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 10- 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க முடியும் தமிழிசை கருதுவதாக கூறப்பட்டது.
கண்டிப்பு
ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழாவில் அமித் ஷா கண்டித்தாரா?
இந்த சூழலில், ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவிற்கு தமிழிசைக்கும் அழைப்பு விடப்பட்டது.
அதற்காக வந்திருந்த தமிழிசை, மேடை மீது அமர்திருந்த அமித் ஷா, வெங்கையா நாயுடு ஆகியோருக்கு வணக்கம் செலுத்தி அங்கிருந்து நகர்ந்து செல்ல முற்பட்ட போது, அவரை மீண்டும் அழைத்த அமித்ஷா, அவரிடம் கண்டிப்பாக பேசியுள்ளார்.
அப்போது அமித்ஷாவின் முகம் இறுக்கமாக இருந்தது. அதோடு விரல்களை எச்சரிக்கும் விதமாக வைத்து கொண்டு பேசினார்.
அதற்கு தமிழிசை ஏதோ பதிலளிக்க, அதை அமித் ஷா ஏற்றுக்கொள்ளாதது போல இருந்ததது.
அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், மாநிலத்தில் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என அவர் எச்சரித்திருப்பார் என்ற யூகங்கள் வெளியாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
எச்சரித்த அமித் ஷா
தமிழிசை சௌந்தரராஜனை கூப்பிட்டு வைத்து தீவிரமாக பேசிய அமித்ஷா..#andhra #chandrababunaidu #andrapradesh #thanthitv #election2024 #electionresultswiththanthitv pic.twitter.com/4AgyPfzJzP
— Thanthi TV (@ThanthiTV) June 12, 2024