வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதால், ஆசிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி, டிட்டோஜாக் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் பிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அந்த நாளில், சுமார் 30.5% ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றும், அவர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரை தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு குழு தெரிவித்துள்ளதும் குறிபிடத்தக்கது.