13 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பதிவான ஜப்பானிய மூளைக்காய்ச்சல்; நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஜப்பானிய மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் கொண்ட முதல் வழக்கு டெல்லியில் பதிவாகியுள்ளது என ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது. 13 ஆண்டுகளில் டெல்லியில் இந்த நோய்க்கான முதல் வழக்கு இதுவாகும். PTI படி, அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட நோயாளி மேற்கு டெல்லியைச் சேர்ந்த 72 வயதுடையவர் எனவும், அவர் கடந்த நவம்பர் 3ஆம் தேதி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்றால் என்ன?
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் ஒரு ஃபிளவி வைரஸ் ஆகும். இது டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் மேற்கு நைல் வைரஸ்களுடன் தொடர்புடையது மற்றும் Culex tritaeniorhynchus என்ற கொசு இனத்தால் பரவுகிறது. வைரஸ், மனிதனுக்கும்-மனிதனுக்கும் தொடர்பு கொள்வதில் இருந்து பரவுவதில்லை.
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் சிகிச்சை மற்றும் தடுப்பூசி
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எனப்படும் JE க்கு எந்த தனிப்பட்ட சிகிச்சையும் இல்லை. மேலும் தற்போதுள்ள சிகிச்சையில் முக்கியமாக நோயின் அறிகுறிகளைக் குறைப்பது மற்றும் மருத்துவ அறிகுறிகளை அகற்றுவது ஆகியவை அடங்கும். WHO இன் படி, சிகிச்சையானது நோயாளிக்கு தொற்றுநோயிலிருந்து மீள உதவுகிறது. எனினும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன.
ஜப்பானிய மூளை அழற்சியின் அறிகுறிகள் என்ன?
பெரும்பாலான ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நிகழ்வுகளில் லேசான காய்ச்சல் மற்றும் ஆரம்பத்தில் தலைவலி ஆகியவை அடங்கும். பல நோயாளிகள் எந்த அறிகுறிகளின் தாக்கம் அதிகம் இல்லை எனக்கூறியுள்ளனர். ஜப்பானிய மூளை காய்ச்சலுக்கான காலம், நோயின் வெளிப்பாடு மற்றும் அறிகுறிகள் தோன்றுவதற்கு இடைப்பட்ட நேரம் 4-14 நாட்கள் ஆகும். நோய் தாக்கிய பிறகு குழந்தைகளுக்கு இரைப்பை குடல் வலி மற்றும் வாந்தி ஏற்படலாம். கடுமையான ஜப்பானிய மூளைக்காய்ச்சல் அறிகுறிகளாக அதிக காய்ச்சல், தலைவலி, கழுத்து விறைப்பு, கோமா, வலிப்பு, ஸ்பாஸ்டிக் பக்கவாதம் மற்றும் சரியாக கவனிக்கப்படாவிட்டால் இறுதியில் மரணத்தினை வரவழைக்கும்