Page Loader
இன்று முதல் தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

இன்று முதல் தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2024
08:50 am

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடாக, தமிழகம் முழுவதும் இன்று, அக்டோபர் 28 முதல் அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கெனவே தெரிவித்தார். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள், மற்ற பகுதிகளில் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்க 1.22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பேருந்து

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் பேருந்துகள்

அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கிளாம்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்துவதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2,000 பேருக்கான அமர இடம், இலவச மருத்துவமனை, ஆம்புலன்ஸ், காவலர்கள், தூய்மை பணியாளர்கள், 8 ஏடிஎம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 18 இயந்திரங்கள், தாய்மார்கள் பாலூட்ட 3 அறைகள், இலவச ட்ராலிகள், 140 தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் நெரிசல் இல்லாமல் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார். கிளாம்பாக்கத்தில் புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு வழியாக காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி போன்ற இடங்களுக்கு, மாதவரம் வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயங்குகின்றன.