NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொற்கோவிலில் சுக்பீர் சிங் பாதல் மீது முன்னாள் பயங்கரவாதி துப்பாக்கி சூடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொற்கோவிலில் சுக்பீர் சிங் பாதல் மீது முன்னாள் பயங்கரவாதி துப்பாக்கி சூடு
    பொற்கோயில் வாசலில் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல்

    பொற்கோவிலில் சுக்பீர் சிங் பாதல் மீது முன்னாள் பயங்கரவாதி துப்பாக்கி சூடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 04, 2024
    10:13 am

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வாசலில் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது பாபர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) முன்னாள் பயங்கரவாதி புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

    துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நரேன் சிங் சௌரா என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த இடத்தில் இருந்த மக்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    மத தண்டனையின் ஒரு பகுதியாக கோவில் நுழைவாயிலுக்கு வெளியே காவலராக பணியாற்றிய சுக்பீர் பாதல் பாதுகாப்பாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்-ஐ பொற்கோயிலில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி

    நூலிழையில் அவர் உயிர் தப்பிய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார்

    அகாலிதளம் கட்சியின் முந்தய ஆட்சியில் செய்த தவறுகளுக்காக… pic.twitter.com/gGgxZlxF2u

    — Sun News (@sunnewstamil) December 4, 2024

    சம்பவம்

    துப்பாக்கி சூடு நடத்தியவரை மடக்கி பிடித்த அதிகாரிகள்

    மத தண்டனையின் ஒரு பகுதியாக கோவில் நுழைவாயிலுக்கு வெளியே காவலராக பணியாற்றிய சுக்பீர் பாதல் பாதுகாப்பாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பாதல், நீல நிற 'சேவதார்' சீருடையில், ஈட்டியைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த போது, துப்பாக்கியால் சுடு நடத்தப்பட்டது.

    உடனே அவர் பாதுகாப்பிற்காக குனிந்து கொள்வது வீடியோ காட்சியில் தெரிகிறது.

    அதே நேரத்தில், அகாலிதளத் தலைவர் அருகில் நின்றிருந்த கோயில் அதிகாரிகள் விரைந்து வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரை மடக்கி பிடித்தனர்.

    தீவிரவாதி

    ஏற்கனவே தீவிரவாத வழக்குகளில் சிறைக்கு சென்றவர் சௌரா

    1984 ஆம் ஆண்டு சௌரா பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும், பஞ்சாபிற்கு ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைக் கடத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    பாகிஸ்தானில், சௌரா கொரில்லா போர் மற்றும் "தேசத்துரோக" இலக்கியம் பற்றிய புத்தகத்தை எழுதியதாக கூறப்படுகிறது.

    புரைல் ஜெயில்பிரேக் வழக்கிலும் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அவர் ஏற்கனவே பஞ்சாபில் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப்

    சமீபத்திய

    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி
    புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு ஜோ பைடனின் முதல் பதிவு ஜோ பைடன்
    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    உங்கள் வீட்டில் வைஃபை இணைப்பு விரைவில் வலுவாகவும் வேகமாகவும் மாறப்போகிறது தொலைத்தொடர்புத் துறை

    பஞ்சாப்

    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு இந்தியா
    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025