ஆந்திராவில் கரையை கடக்க இருக்கிறது மிஜாம் புயல்
செய்தி முன்னோட்டம்
சென்னையை ஆட்டி படைத்த மிஜாம் புயல் தெற்கு ஆந்திர கடற் பகுதிக்கு நகர்ந்துள்ளதால், சென்னை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த மிஜாம் புயல், இன்னும் சிறிது நேரத்தில் ஆந்திர கடற்கரையில் உள்ள பாபட்லா அருகே தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது.
புயல் கரையை கடக்கும் போது, 1-1.5 மீட்டர் உயரத்திற்கு அலை அடித்து தென் கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் தாழ்வான பகுதிகளை மூழ்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலின் பாதிப்பு, ஆந்திராவின் பாபட்லா மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் அதிகம் காணப்படும்.
புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும், இடையிடையே 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
எதுஜிகிவ்க்
புதுச்சேரியில்144 தடை உத்தரவு
திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கோனசீமா மற்றும் காக்கிநாடா ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆந்திர அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி வரை கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், உயிர் சேதம் மற்றும் பொருள் சேதத்தைத் தவிர்க்க புயலை ஒரு பெரிய சவாலாகக் கருதுமாறு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தலா ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ரெட்டி கூறியுள்ளார்.