இன்னும் சில மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற இருக்கிறது மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதன் காரணமாக இன்று இரவு வரை பலத்த காற்று மற்றும் கனமழை தொடர் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அது போக, பாதுக்காப்பு முன்னெச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். அதிக கனமழை காரணமாக, சென்னை பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளது. எப்போதும் சென்னையில் 2600 பேருந்துகள் இயங்கும். ஆனால், அது தற்போது 320ஆக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சென்னை ஆற்றங்கரை பகுதிகளில் இருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.