NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிக்ஜாம் புயல்: யாருக்கெல்லாம் இன்று விடுமுறை? எந்தெந்த சேவைகள் இன்று இயங்காது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிக்ஜாம் புயல்: யாருக்கெல்லாம் இன்று விடுமுறை? எந்தெந்த சேவைகள் இன்று இயங்காது?
    சென்னை மற்றும் புதுச்சேரி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்

    மிக்ஜாம் புயல்: யாருக்கெல்லாம் இன்று விடுமுறை? எந்தெந்த சேவைகள் இன்று இயங்காது?

    எழுதியவர் Sindhuja SM
    Dec 04, 2023
    08:25 am

    செய்தி முன்னோட்டம்

    வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னைக்கு 50 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எனவே, சென்னை மற்றும் புதுச்சேரி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக, ஆந்திராவின் என்டிஆர் மாவட்டம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் 5ஆம் தேதி காலை வரை புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    டக்வ்உஜூ

    சில கடலோர தமிழக மாவட்டங்களுக்கு விடுமுறை 

    தமிழக கடற்கரையை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்ந்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.

    மேலும், புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும் இன்று இயங்காது.

    டௌளையோ

    சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் பாதிப்பு; சென்னை-திருச்சி நெடுஞ்சாலை துண்டிப்பு 

    கனமழை காரணமாக தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மட்டுமே புறநகர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    செங்கல்பட்டில் நேற்றிரவு முதல் பெய்து வந்த கனமழையால் கூடுவாஞ்சேரி அருகே உள்ள தேசிய நெஞ்சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    தற்போதைக்கு ஒரு பாதை வழியாக சென்னை-திருச்சி வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல காலை 5 மணிக்கு துவங்கியது.

    கனமழை பெய்வதால், செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோவின் பைக் பார்க்கிங் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    அதுமட்டுமின்றி, இந்த மெட்ரோ ரயில் நிலையம் சுற்றிலும் 4 அடிக்கு நீர் தேங்கி நிற்பதால், பயணிகள் ஆலந்தூர் மெட்ரோவை பயன்படுத்துமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    டவ்க்க்ள்

    சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 6 ரயில்கள் ரத்து

    பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

    டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அவை,

    1. எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ்,

    2. சென்னை சென்ட்ரல்-கோவை எக்ஸ்பிரஸ்,

    3. சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ்,

    4. சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூரு ஏசி டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ்,

    5. சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்,

    6. சென்னை சென்ட்ரல்-திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்.

    டக்வ்ல்ஜ்

    சென்னையில் உள்ள சில சுரங்கப்பாதைகள் மற்றும் பாலங்கள் மூடல் 

    இதனால், சென்னை முழுவதும் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பாய்வதால், பாதுகாப்பு காரணங்களுக்காக பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையே உள்ள பாலம் எண்.14 ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    மேலும், கெங்குரெட்டி சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை-அரங்கநாதன் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, தில்லைநகர், சி.பி.சாலை, வில்லிவாக்கம், வியாசர்பாடி, செம்பியம், கணேசபுரம் ரங்கராஜபுரம், பழவந்தாங்கல், ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

    மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக டிசம்பர் 5 ஆம் தேதி வரை மழையின் தீவிரம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகமாக கனமழை பெய்ய இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழகம்
    செங்கல்பட்டு
    திருவண்ணாமலை

    சமீபத்திய

    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்
    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா உக்ரைன்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்

    சென்னை

    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  பெங்களூர்
    ₹100 கோடி மோசடியில் ஈடுபட்ட திருச்சி நகைக்கடை-அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம் திருச்சி
    தொண்டை வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை- காவல்துறையினருக்கு மன்சூர் அலிகான் கடிதம் மன்சூர் அலிகான்
    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா நடிகர் சூர்யா

    தமிழகம்

    விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு  தமிழக அரசு
    சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்  இஸ்ரோ
    அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    வங்கி கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட்: சென்னை மருந்து கடை ஊழியருக்கு அடித்த யோகம்  சென்னை

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  கர்ப்பம்
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி  அரசு மருத்துவமனை

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025