தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
'ஹாமூன்' புயல், வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தின் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே நாளை(அக் 25) நண்பகல் கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
7 மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் அக்டோபர் 25 ஆம் தேதி வரை வங்காள விரிகுடாவிற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒடிசா, மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், அசாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் உஷார் நிலையில் உள்ளன.
தமிழக மீனவர்களும் அடுத்த 24 மணிநேரத்திற்கு வங்கக்கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கஜேபிசி
இதுவரை விடுக்கப்பட்ட மழை எச்சரிக்கைகள்
ஹமூன் புயல் இன்று காலை 6 மணியளவில் தீவிர புயலாக மாறியது.
இன்று அதிகாலை 3 மணியளவில், 'ஹமூன்' சூறாவளி 18 கிமீ வேகத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது.
ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து தென்கிழக்கே 200 கிமீ தொலைவிலும், மேற்கு வங்காளத்தின் திகாவிற்கு தென்-தென்கிழக்கே 290 கிமீ தொலைவிலும் அப்போது ஹமூன் புயல் மையம் கொண்டிருந்தது.
மணிப்பூர், மிசோரம், தெற்கு அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் இன்றும் நாளையும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் இன்று மட்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.