பிபர்ஜாய் புயல்: 940 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் மையம் கொண்டுள்ள 'தீவிர' புயலான பிபர்ஜாய், வடகிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் ராஜஸ்தானில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.
பிபர்ஜாய் புயல் மேலும் வலுவிழந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று அதிதீவிர புயலாக குஜராத் கடற்கரையை கடந்த பிபர்ஜாய் புயல், நேற்று நள்ளிரவு தீவிர புயலாக மாறியது. மேலும், இதன் தாக்கம் இன்னும் குஜராத்தில் இருந்து வருகிறது.
அதிதீவிர புயலில் இருந்து தீவிர புயலாக மாறியுள்ள பிபர்ஜாய் புயல், தற்போது ராஜஸ்தான் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பிபர்ஜாய் புயலை எதிர்கொள்ள மாநிலம் தயாராக உள்ளது என்று கூறி இருக்கிறார்.
கிடக்கின்
'புயல் காரணமாக சுமார் 22 பேர் காயமடைந்துள்ளனர்': குஜராத் நிவாரண ஆணையர்
பாவ்நகர் மாவட்டத்தில் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆடுகளை காப்பாற்ற முயன்ற கால்நடை வளர்ப்பாளரும் அவரது மகனும் உயிரிழந்தனர்.
"புயல் காரணமாக சுமார் 22 பேர் காயமடைந்துள்ளனர். 23 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 524 மரங்கள் சாய்ந்துள்ளன. சில இடங்களில் மின்கம்பங்களும் விழுந்துள்ளது. இதனால் 940 கிராமங்களில் மின்சாரம் இல்லை." என்று குஜராத் நிவாரண ஆணையர் அலோக் பாண்டே கூறியுள்ளார்.
குஜராத்தின் ஜகாவ் அருகே நேற்று மாலை 6.30 மணியளவில் 115-125 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் குஜராத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
மேலும், பிபர்ஜாய் புயல் வடமேற்கு நோக்கி நகர்வதால், ஜூன்-16 மற்றும் 17ஆம் தேதிகளில் ராஜஸ்தானில் கனமழை பெய்யும் என்று IMD எச்சரித்துள்ளது.