Page Loader
கபாப் உணவு பிடிக்கவில்லை என சமையல்காரரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்! 
உணவு பிடிக்கவில்லை என கடைக்காரரை சுட்டுவிட்டு தப்பியோடி நபர்கள்

கபாப் உணவு பிடிக்கவில்லை என சமையல்காரரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்! 

எழுதியவர் Siranjeevi
May 05, 2023
11:36 am

செய்தி முன்னோட்டம்

உத்தரப் பிரதேசத்தில் கபாப் உணவு பிடிக்கவில்லை என இருவர் கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி அருகே உள்ள பிரேம் நகர் பகுதியில் அமைந்துள்ளது பிரியதர்ஷினி என்ற பழமையான உணவகம். இந்த உணவகத்தில் கடந்த நாள் இரவு குடிபோதையில் இருவர் காரில் வந்து கபாப் உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அதன் பின்பு கபாப் உணவு பிடிக்கவில்லை என கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தப் பிரதேசம்

உணவு பிடிக்கவில்லை கடைக்காரரை என துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்

தொடர்ந்து வாக்குவதம் முற்ற கடைக்காரரை சபர்வால் என்பவரை தாக்கிவிட்டு காரில் தப்பிச் செல்ல தயாராகியுள்ளனர். தொடர்ந்து கடைக்காரர், சமையல்காரர் நசீர் என்பவரை அனுப்பி பணம் வாங்கி வர அனுப்ப, அப்போது எதிர்பாராத விதமாக அந்த நபர்கள் துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு காரில் தப்பிச்சென்றுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே நசீர் என்பவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின் கடை உரிமையாளர் புகார் அளிக்க காரின் எண்ணை கொண்டு காவல்துறையினர்கள் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.