
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு: தமிழக அரசு உறுதி
செய்தி முன்னோட்டம்
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இந்த கட்டுமான பணிகளை தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை நிறுத்திவைக்கும் என அந்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வடலூரிலுள்ள வள்ளலார் சத்திய ஞான சபை முன்பு இருக்கும் 70-ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில், 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
எனினும், அதற்கு தடைக்கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்கில், தொல்லியல் குழு அறிக்கை அளிக்கும்வரை கட்டுமானப் பணிகளை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது? என நீதிபதிகள் கேட்டதைத்தொடர்ந்து, கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
வள்ளலார் சர்வதேச மையம்
#BREAKING || வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10ம் தேதி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி
— Thanthi TV (@ThanthiTV) April 30, 2024
சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மே 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு#Vallalar #Construction pic.twitter.com/3q5PXPaYTe